- மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஓவியங்கள் இப்பகுதியை வண்ண மயமாக்கிக் கொண்டிருக்கின்றன.
- அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெறாதவர்கள் நற்றிணைக்குத் தெரிவித்து பெற்றுக் கொள்ளலாம்.
- மாணவர்களின் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஓவியத்தின் அருகில் குறிப்பிடப்பட்டுள்ள ஊக்கத்தொகை மாணவரின் வங்கிக் கணக்கில் நற்றிணை அறக்கட்டளை மூலம் செலுத்தப்படுகிறது.
- பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது.
- சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொக மாணவர் நற்றிணை இணையதளத்தில் Subscribe செய்தவுடன் மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- சிறப்புத் தொகையில் அழுத்தி நற்றிணை நேயர்கள் அளிக்கும் சிறப்புத்தொகையும் குறிப்பிட்ட அந்த மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- A-4 அளவு காகிதத்தில் வரைய வேண்டும்.
- ஒவ்வொரு வாரமும் ஒரு மாணவரின் படைப்பு ஒன்று மட்டுமே வெளியிடப்படும்.
- மாணவர்கள் தங்களது படைப்புகளைஆசிரியரின் முத்திரையிடப்பட்ட கையெழுத்துடன் Material Upload மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- ஆசிரியர் கையொப்பம் இல்லாத படைப்புகளை மாணவர்கள் தபால் வழியாக இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும். Natrinai Charitable Trust, 4/739, Cholan Nagar, North Kattur, Trichy-620 019.
(கீழேயுள்ள comment box-ல் நேயர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்)
நற்றிணைக்கு
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்களுக்கு நற்றிணையின் நன்றிகள்.
நற்றிணையின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா.தங்களின் புதிய பயணத்தில் எங்களது மாணவர்களும் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி.
நற்றிணை க்கு நன்றி
#நற்றிணை_வெற்றிப்படிக்கட்டுகள்
நிகழ்வுகள்
பேச்சு
ஓவியம்
எழுத்து
வாழ்க்கையில் வெற்றியாளர்களாக பிறப்பதில்லை வெற்றியாளர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கான சான்று
ஒவ்வொரு குழந்தைகளும் திறமைசாலிகளே
திறமைசாலிகளின் சங்கமமே வகுப்பறை-ஆம்
படிப்பு மதிப்பெண் ஒன்றே பிரதானம் என்ற வகையில் பயணிக்கும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூகத்தின் பார்வையில் பிள்ளைகளின் வாழ்வில் அக்கறை கொண்டு அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கும்
நற்றிணை அறக்கட்டளைக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
மாணவச் செல்வங்களின் தனித் திறமைகளை போற்றிக் கொண்டாடும் உங்கள் பணி போற்றுதலுக்குரியது ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமா(ன)ணவர்கள் அத்தகைய வித்யாசமான மாணவர்களின் தனித்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக நற்றிணை வெற்றிப்படிகள் நிகழ்வு அமைந்துள்ளது ஆம் மாணவர்களின் தனித்துவத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி அவர்களின் வாழ்வில் ஏற்றம் தரவே இந்த ஊக்குவிப்பு அமைகிறது அந்த வகையில் எங்கள் பள்ளி மாணவ செல்வங்களின் தனித்துவத்தை அங்கீகாரித்து அவர்களுக்கான ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பித்ததுள்ள நற்றிணை அறகட்டளைக்கு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகளை ஒரு ஆசிரியனாக தெரிவிக்க மனம் மகிழ்கிறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் வாத்தியார் நண்பன்
அருள் பிஜி
அரசு உயர்நிலைப்பள்ளி கீழ்வீதி, இராணிப்பேட்டை மாவட்டம்
PIN code:632502
அலைபேசி எண்-9884342720
தங்களின் மனம் திறந்த பாராட்டுதலுக்கு நற்றிணைக் குழுவினரின் மனமார்ந்த நன்றிகள்
மாணவ- மாணவிகளின் தனித்திறன்களை வார்த்தெடுக்கின்ற தனித்தளமாக நற்றிணை அமைந்துள்ளது. எங்கள் பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றிக்கொள்ள உந்துசக்தியாக அமைந்துள்ள நற்றிணை குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி. எங்கள் அரசுப் பள்ளி மாணவ- மாணவியர்களின் தனித்திறன்களுக்கு இதுவரை ரூபாய் 3000 க்கும் மேற்பட்ட தொகையை பரிசாக வழங்கிய அனைவருக்கும் நன்றி.. அன்புடன் ப.சௌந்தரராசன் (தமிழாசிரியர் )அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம். அலைபேசி: 8072002216
மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணையின் சேவைக்கு தோள்கொடுக்கும் தங்களின் ஆதரவு போற்றுதலுக்குரியது. முனைப்புடன் நமது பயணத்தை தொடர்வோம். நன்றி.