படிப்பு மிக முக்கியம்.
படிப்பு மட்டுமே முக்கியமல்ல.
மாணவர்கள் தங்கள் திறமையை நற்றிணை இணையதளம் மூலமாக வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்த பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
- இணையதளத்தில் Login செய்து உள்நுழைய வேண்டும்.
- Subscribe படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- Material Upload Button மூலம் தங்களது படைப்புகளை மாணவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் நற்றிணை இணையதளத்தில் வெளியிடப்படும்.
- இதில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பாராட்டுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுகிறது.
- மாணவர்களின் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு பதிவிற்கும் அருகில் குறிப்பிடப்பட்டுள்ள ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நற்றிணை அறக்கட்டணை மூலமாக செலுத்தப்படுகிறது. பச்சை வண்ணத்தில் உள்ள தொகை செலுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு வண்ணத்தில் உள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கு விபரத்திற்காக காத்திருப்பில் உள்ளது.
- ஒவ்வொரு படைப்பிலும் Special Gift என்ற பகுதியை அழுத்தி நற்றிணை நேயர்கள் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கலாம்.
- பேச்சு, ஓவியம், எழுத்து ஆகிய மூன்று பிரிவிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.
- ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாணவருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு படைப்பு மட்டுமே வெளியிடப்படும்.
- ஞாயிறு முதல் புதன்கிழமைவரை மாணவர்கள் தங்கள் படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம்.
- ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் தேர்வு செய்யப்பட்ட பதிவுகள் நற்றிணை இணையதளத்தில் வெளியிடப்படும்.
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றியாளர்கள்
Leave A Comment
You must be logged in to post a comment.