ஒலிப்பேழை

நமது இணையதளத்தை அதிகம் பயன்படுத்தும் பார்வை மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக தமிழின் சிறந்த படைப்புகள் இங்கே ஒலியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள படைப்புகள் குறித்து தொடர்புடைய நபர்கள் அதிருப்தி தெரிவித்தால் அப்படைப்புகள் இங்கிருந்து நீக்கப்படும்.

  • படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இந்தக் காலத்தில் தமிழ் நூல்களை பாதுகாக்கும் நோக்கில் அவற்றை ஒலியாக்கம் செய்யும் முயற்சியை நற்றிணை கையில் எடுத்துள்ளது.
  • நற்றிணையின் தமிழ்ச்சேவையில் ஈடுபட விரும்பும் அன்பர்கள் தங்கள் குரலில் தமிழ் நூல்களை வாசித்து ஒலிப்பதிவு செய்து  அனுப்பி வைக்கலாம். தரமான ஒலிப்பதிவுகள் இங்கு வெளியிடப்படும்.
  • நம் வாழ்நாளில் நம் தாய் தமிழுக்காக செய்யும் இந்தச் சேவை அடுத்து வரும் தலைமுறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
  • கொரோனா விடுமுறைக் காலத்தை தமிழுக்காக பயன்படுத்தலாமே?
  • தமிழ் நூல்களை போற்றிப் பாதுகாக்கும் இந்த அறப்பணியில் ஈடுபட அன்புடன் அழைக்கிறோம்.
  • தொடர்புக்கு – 97877 34166
நன்றிகளுடன்
நற்றிணைக் குழு

திரு வெ.இறையன்பு அவர்களின் மிகச்சிறந்த கட்டுரைகள்

நன்றி: விகடன் பிரசுரம்

கவியரசு கண்ணதாசனின் சேரமான் காதலி

திருச்சியில் இயங்கிவரும் ஜெகத்ஜோதி – பார்வை மாற்றுத் திறனாளர்களுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் திருமதி பிரபாவெங்கட்ராமன்  அவர்கள் பார்வை மாற்றுத் திறனாளர்களுக்காக வாசித்து அளித்த குரல்பதிவு  இங்கே ஒலிக்கிறது.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்