சிலப்பதிகாரவிருந்து

– காரைக்குடி இராம.இராமநாதன்

நற்றிணை நேயர்களுக்கு  வணக்கம். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார காப்பியத்தை மிக எளிய நடையில் நற்றிணை இணைய வானொலியில்  தினந்தோறும் ஐந்து நிமிடங்கள் வழங்கி வந்தேன்.ஒவ்வொரு நாளும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆவலோடும் நேயர்களால் எதிர்பார்க்கப்பட்ட இக்காவியம் தொண்ணூறு நாட்களால் தமிழ்கூறும் நல்லுலகை வலம் வந்தது.  சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் முன்னிலையில் இப்பதிவின் குறுந்தகடு  வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் இக்காப்பியத்தைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுவதையே எனது வாழ்நாள் சேவையாக கருதி வருகிறேன். சிலப்பதிகார முழுக்காப்பியத்தையும் தமிழ் நெஞ்சங்களில் பதிவேற்றம் செய்ய உறுதுணையாய் நின்ற நற்றிணையைப் பாராட்டுவதோடு இனிவரும்  தலைமுறைகளும் இப்பதிவைச் செவியுற்று தமிழமுதம் சுவைக்க அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்

இராம.இராமனாதன்
காரைக்குடி
9442611510

இந்தப் பதிவுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.