சமையல் சமையல்
ஒவ்வொரு நாளும் நற்றிணையில் நான் வழங்கிக் கொண்டிருக்கும் சமையல் சமையல் என்ற இப்பகுதியை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பிக் கேட்கிறார்கள். இப்பகுதி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலத் துறை ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கறேன். பார்வைமாற்றுத் திறனாளியாக இருந்த போதிலும் என்னாலும் இப்படி ஒரு நிகழ்ச்சியை வழங்க முடியும் என்பதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு இந்நிகழ்ச்சியை திறம்பட வழங்கி வருகிறேன். தெற்கு மற்றும் வடமாநில சமையல் குறிப்புகளும் இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேயர்கள் கேட்டுப் பயன்பெறுங்கள். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள comments பகுதியில் பதிவு செய்யுங்கள். தங்கள் நண்பர்களும் இதைக் கேட்டுப் பயன்பெற பகிர்வு செய்யுங்கள்.
என்றும் அன்புடன்
அலமேலு, சென்னை