அன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். நான் திட்டக்குடி முக்கனி. வங்கிப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வாட்ஸப் வழியாக வந்து கொண்டிருந்த நற்றிணைப் பதிவுகளை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். நற்றிணையில் வெளிவரும் நித்தம் ஒரு முத்து என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. பலநேரங்களில் எனக்கு ஆறுதல்களையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய பங்கு அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி நற்றிணைக்கு கருத்து தெரிவித்தபோது என்னையும் நிகழ்ச்சி வழங்குமாறு ஆலோசனை கொடுத்தார்கள்.
சிறுகதை சொல்லிப் பார்க்கலாம் என்று துவங்கினேன். ஆனால் எதிர்பார்த்ததைவிட நேயர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது. கதையைவிட நான் கதைசொல்லும் விதம் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். பார்வை மாற்றுத் திறனாளியான எனக்கு புத்தகங்களிலிருந்து கதைகள் சேகரிப்பது சற்று கடினமாக இருக்கவே. எனது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன். அவை அள்ளிக் கொண்டுவந்த கருக்களை மையப்படுத்தி கதைகளை வடிவமைத்தேன். எனக்குள் ஒளிந்திருந்த திறமையை எனக்கே தெரியப்படுத்திய நற்றிணைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் நான் வழங்கிய கதைகளின் ஒலிவடிவம் இங்கே வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். பிற சமூக ஊடகங்களுக்கும் Share செய்யுங்கள்.
என்றும் அன்புடன்
முக்கனி, திட்டக்குடி