விருதுநகர் VHN செந்திகுமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது சிறுசிறு கதைகளைக் கூறுவது வழக்கம். இக்கதைகள் மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புப் பெற்றன. வகுப்பறையை உற்சாகப்படுத்திய இக்கதைகள் நேயர்களையும் உற்சாகப்படுத்தும் என்ற நோக்கில் என் தேடல்களை அதிகப்படுத்தி நற்றிணை நேயர்களுக்கு தினந்தோறும் வழங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது எண்ணத்தை நேயர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக நாளும் ஒரு விதை என்ற தலைப்பைச் சூட்டினேன். இதில் ஏதேனும் ஒரு விதையாவது உங்கள் எண்ணத்தில் விழுந்து முளைத்தால் மிகவும் மகிழ்வேன். என் குரலைப் பெரிதும் வரவேற்று அவ்வப்பொழுது ஊக்குவித்த அனைத்து நேயர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாட்ஸப் வழியாக வழங்கிய எனது பதிவுகளைத் தொகுத்து நற்றிணை இணைய தளத்தில் நிரந்தரப் பதிவாக்கிய நற்றிணைக் குழுமத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இங்குள்ள பதிவுகளைச் சுவையுங்கள். உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். நன்றி.