நற்றிணை நேயர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். தமிழின் சிறந்த புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை தினந்தோறும் வாசித்து அளிக்கிறேன். துவக்கத்தில் சோதனை முயற்சியாக துவஙகினேன். நேயர்களின் ஏகோபித்த வரவேற்பால் எனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொழுதுபோக்கு சாதனங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் புத்தகங்களில்தான் கோடிக்கணக்கான கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அறிவுக் கருவூலங்களாக திகழும் புத்தகங்களை அனைவரையும் வாசிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தின் ஒரு சிறு முயற்சிதான் இந்த நித்தம் ஒரு முத்து நிகழ்ச்சி.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக எனது வாசிப்பு இருப்பதாக பெரும்பாலான நேயர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நற்றிணை நேயர்களால் பெரிதும் வரவேற்புப் பெற்ற இப்பதிவுகள் உங்கள் கவனத்தையும் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். தினந்தோறும் சுமார் ஐந்து நிமிடங்கள் வாசித்து அளிக்கப்படும் இப்பகுதியின் ஒலித்தொகுப்பு இங்கே அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களும் பயன்பெற விரும்பினால் சமூக ஊடகங்களில் Share செய்யுங்கள்.
என்றும் அன்புடன்
செ.ஞானப்பிரியன், அரிமழம்