மாணவர்களின் பேச்சுத்திறமையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களின் காணொளிகளை நற்றிணை யூட்யூப் சேனலில் வெளியிடுகிறோம். அதன் தொகுப்பு இங்கே காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும்…
மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்திற்காக நற்றிணை யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு காணொளிப் பதிவிற்கும் ஊக்கத்தொகை மாணவரின் வங்கிக் கணக்கிற்கு நற்றிணை அறக்கட்டளை மூலம் செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு பதிவிற்கும் அருகில் பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவரின் வங்கிக் கணக்கு விவரத்திற்காக காத்திருப்பில் உள்ளது.
பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள்வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
தெளிவான உச்சரிப்புடன், மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். பதிவு செய்தவர் பெயரும் வெளியிடப்படும்.
Leave A Comment
You must be logged in to post a comment.