நற்றிணை அறக்கட்டளை

துவக்கம்

23 மே 2015 அன்று நற்றிணை என்ற  வாட்ஸப் குழுமம் மூலமாக  தினசரி முக்கியச் செய்திகளை மட்டும் ஒலிவடிவில் குழுவில் அனுப்பும் சேவை துவங்கப்பட்டது. குழு உறுப்பினர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதால் தமிழ் தொடர்பான தகவல்களும் குழுவில் பகிரப்பட்டது. தமிழ் நூல்களின் சிறு பகுதிகளை மட்டும் வாசித்து ஒலிவடிவில் அனுப்பப்பட்ட “நித்தம் ஒரு முத்து” என்ற பகுதி நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது. அறிஞர்களின் சிந்தனைகளைத் தாங்கி வந்த “ஒரு நிமிட யோசனை” வழங்கிய அனுகீர்த்தனாவிற்கு உலகளவில் ரசிகர்கள்வட்டம் விரிந்தது.

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது நற்றிணை அறக்கட்டளை.

தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதோடு தமிழின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழ் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு துவங்கப்பட்டதே நற்றிணை அறக்கட்டளை.

ஏழைஎளிய மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிசெய்வதும்,
திறமையாளர்களை இனங்கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பதும் நற்றிணையின் செயல்பாடுகள் ஆகும்.

மாணவர்களிடையே இணையம்மூலமாக பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளோம்.

26.12.2016 முதல் 30,12,2016 வரை திருச்சியில் நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கணிப்பொறி பயிற்சிக்கு நற்றிணை நேயர்களிடமிருந்து நன்கொடை வசூலித்து அளித்து பயிற்சி சிறப்பாக நடைபெற உதவியுள்ளோம்.

நற்றிணை இணைய ஒலிபரப்பின் 500-வது நாள் விழாக் கொண்டாட்டம் 2.10.2016 அன்று திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிப் பங்களிப்பாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தோம். வருகைதந்திருந்த நேயர்களுக்கு மதியஉணவு வழங்கி சிறப்பித்தோம்.

திருச்சியில் பார்வைமாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் ஜெகத்ஜோதி தன்னார்வலர் அமைப்புபற்றி இணையத்தில்அறிவிப்பு செய்து புதியநபர்களை இணைத்துள்ளோம்.
பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாசித்துக் கொடுத்தல், இணையத்திலிருந்து தேவையான பகுதிகளை பதிவிறக்கம் செய்துகொடுத்தல், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுத்தல் போன்ற உதவிகளை தன்னார்வலர்கள் மூலமாக செய்து வருகிறோம்.

தினந்தோறும் செய்தித்தாள்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளை வாசித்து இணையதளம் மற்றும் இணைய வானொலி மூலமாக ஒலிபரப்புச் செய்வது பார்வைமாற்றுத் திறனாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் நற்றிணை அறக்கட்டளை சமூ கஅக்கறையோடு மேலும் பல சேவைகள் தொடர்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

Address:

Natrinai Charitable Trust,
C/o Eha Creations, AJS Tower, Tanjore Main Road,
Sakthinagar, Kattur,Trichy-620019
Tamilnadu, India.
Cell: 8220999799 / 978773416
E-mail: info@narinai.org, / natrinaihelpcenter@gmail.com
Web : http://www.narinai.org

கஜா புயலில் நற்றிணையின் சேவை

நற்றிணை நேயர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

பார்வை மாற்றுத்திறன் -கணினிப் பயிற்சி

திருச்சி NIIT-ல் 26-12.2017 முதல் 30-12.2017 வரை பார்வை மாற்றுத் திறனாளிக்கான கணிப்பொறி பயிற்சி நடைபெற்றது. நற்றிணை நேயர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை ரூ.12,000/- நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு.ஜாபர் அவர்களிடம் வழங்கப்பட்டது.